×

உடல்நலம் குன்றிய நிலையில் ‘ஹாரி பாட்டர்’ நடிகர் மரணம்

கிளாஸ்கோ: ஹாரி பாட்டர் திரைப்பத்தில் நடித்த நடிகர் ராபி கோல்ட்ரேன் என்பவர் உடல்நலக் குறைவால் ஸ்காட்லாந்தில் காலமானார். பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் எழுதிய ‘ஹாரி பாட்டர்’ என்ற புத்தகம் சிறுவர்களை மட்டுமின்றி பெரியவர்கள் மத்தியிலும் புகழ்பெற்றது. ஹாரி பாட்டர் கதை திரைப்படமாக வெளியாகி கோடிக்கணக்கில் வசூலைக் குவித்தது. இந்த நிலையில் ஹாரி பாட்டர் திரைப்படத்தில் ஹாக்ரிடாக நடித்த ஸ்காட்டிஷ் நடிகர் ராபி கோல்ட்ரேன் (    72) உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஸ்காட்லாந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் தொடர் சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கிளாஸ்கோவிற்கு அருகிலுள்ள ரூதர்க்லனில் அந்தோனி ராபர்ட் மெக்மில்லனில் பிறந்த இவர், ஹாலிவுட் படங்களில் ஒரு நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும், எழுத்தாளராகவும் பல சாதனைகளை புரிந்துள்ளார்.

Tags : 'Harry Potter' actor dies after failing health
× RELATED அயோவாவில் பறவைக் காய்ச்சல்: 42 லட்சம் கோழிகள் அழிப்பு